யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் நகை திருட்டு: விசாரணையில் இருவர் கைது
யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தவேளை மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகையை திருடிய சந்தேகநபர்
இந்நிலையில் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் நகையை திருடிய சந்தேகநபரை கைது செய்ததுடன் நகையையும் மீட்டுள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் இன்னொரு சந்தேகநபரையும் இன்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்றையதினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரே குறித்த திருட்டுக்கு திட்டமிட்டு கொடுத்துள்ளார் என்பதுடன், அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri