நுவரெலியாவில் வீடு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை
நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தில் வீடொன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவமானது நேற்றுமுன் தினம் (20.03.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
குறித்த வீட்டார் காலை நேரத்தில் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது , வீட்டினுள் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை அவதானித்ததுடன் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததையும் அவதானித்து உள்ளனர்.

அத்துடன் நகைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்த இடத்தினை பார்த்த போது நகைகள் திருடப்பட்டு உள்ளதை அறிந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற நுவரெலியா சொக்கோ (SOCO) பிரிவின் பொலிஸாரோடு இணைந்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri