பிரித்தானியா வந்த பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போர் விமானங்களின் உதவியுடன் தரையிறக்கம்
பிரித்தானியாவிற்கு வந்த பயணிகள் விமானம் ஒன்று வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து இரண்டு போர் விமானங்களால் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து துருக்கியின் டலமானில் இருந்து மான்செஸ்டர் சென்ற ஜெட்2 ஏர்பஸ் ஏ321 என்ற விமானம் வழியில் எசெக்ஸ், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கப்பட்ட பின்னர், பிரதான முனையத்திலிருந்து விலகி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு விமானம் கொண்டு செல்லப்பட்டது.
ஓடு பாதைக்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள்
வெடிகுண்டு மிரட்டலுக்கு மத்தியில் விமானம் தரையிறங்குவதற்காக ஓடுபாதையில் ஆயுதமேந்திய பொலிஸார் காத்திருந்தனர். இரண்டு போர் விமானங்கள் மூலம் விமானம் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
Emergency services waiting at Stansted Airport this evening pic.twitter.com/79F0eHLRHJ
— Palf (@JackPalfreman) October 12, 2022
தீயணைப்பு வாகனங்கள் உட்பட பல அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெட்2 இன் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
“இங்கிலாந்தின் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி இன்று மாலை டாலமானில் இருந்து மான்செஸ்டருக்குச் செல்லும் LS922 விமானம் லண்டனுக்குத் திருப்பிவிடப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.
"விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன் பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
