மண்ணெண்ணெய்க்கு மாற்றாக விமான எரிபொருளை இறக்குமதி செய்ய திட்டம்: எரிசக்தி அமைச்சகம் தகவல்
மண்ணெண்ணெய்க்கு மாற்றாக விமான எரிபொருளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.ஆர். ஓல்கா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய மண்ணெண்ணெய் தேவையை சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக பூர்த்தி செய்து வருவதாகவும் எனினும், தேவையான தொகையை வழங்க முடியாது என நிரூபிக்கப்பட்டால், விமான எரிபொருளை உள்ளபடியே நாட்டிற்கு இறக்குமதி செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றிக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இலங்கை கடந்த பல மாதங்களாக விமான எரிபொருளை இறக்குமதி செய்து வருவதாக தெரிவித்த அமைச்சின் செயலாளர், விமான எரிபொருள் இயற்கையில் நிறமற்றதாக இருந்தாலும், நாட்டின் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய அதனை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு இல்லாததால் கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திங்கட்கிழமை (03) முதல் மூடப்படும் என அமைச்சு 30 டிசம்பர் 2021 அன்று அறிவித்தது.
எவ்வாறாயினும், நீண்டகால சிங்கப்பூர் ஒப்பந்தக்காரரிடமிருந்து விநியோகம் ஜனவரி 26 ஆம் திகதி தொடங்கும் என்பதால், சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன்னர் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது,
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அமைச்சு உறுதியளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan