போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை குரல் பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்
பௌத்த மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோவை குரல் பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அரசாங்க பரிசோதகர்க்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தை உறுதிப்படுத்துவதற்காக சந்தேகநபரை குரல் பரிசோதனைக்காக அரசாங்கப் பரிசோதகர்க்கு சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (27.12.2023) மீண்டும் அழைக்கப்பட்ட போது, சந்தேகநபர் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மிக குறுகிய கால அவகாசம்
சந்தேகநபரின் மதரீதியிலான சீர்குலைவு அறிக்கைகள் தொடர்பான ஒலிப்பதிவு அடங்கிய ஆதரத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்திருந்தனர்.
சந்தேக நபருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, வழக்கை மீள அழைப்பதற்கு மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒப்படைக்கப்பட்ட வழக்குத் தொடரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
