எதிர்வரும் 21ஆம் திகதி சர்ச்சைக்குரிய போதகரின் ஜெபக்கூட்டம்! இரத்தக் காடாகும் நாடு - கடும் எச்சரிக்கை
ஏனைய மதங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட கிறிஸ்தவ மதப்போதகர் ஜெரோம் பெர்ணான்டோவினால் எதிர்வரும் 21ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜெபக் கூட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் நாடு இரத்த மற்றும் நெருப்புக் காடாகும் அபாயம் உள்ளதாகவும் பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கடுமையாக எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (17.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 21ஆம் திகதி தேவகிருபை கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும், இதில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் இந்த கூட்டத்திற்கு இடமளித்தால் நாடு இரத்தக்காடாகவும், நெருப்புக் காடாகவும் மாறும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |