உலக நாடுகளை உலுக்கிய எப்ஸ்டீன் விவகாரம்! இறுதி கடிதம் தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்
உலக நாடுகளை உலுக்கிய சர்ச்சைக்குரிய ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் தற்போது கடிதமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமிகளை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டிருந்த ஜெப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயோர்க்கின் மான்ஹாட்டன் சிறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் குறிப்பு தொடர்பில் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றம் இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்
கண்டெடுக்கப்பட்ட சிறுகுறிப்பு
எப்ஸ்டீனுடன் ஒரே சிறை அறையில் இருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரியும், கொலைக் குற்றவாளியுமான நிக்கோலஸ் டார்டாக்லியோன், இந்த சிறுகுறிப்பைக் கண்டெடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கடிதத்தில், அவர்கள் பல மாதங்களாக என்னைப் பற்றி விசாரணை நடத்தினார்கள். ஆனால் எதையும் கண்டுபிடிக்கவில்லை, அதன் விளைவாக 15 ஆண்டுகள் பழமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

பிரியாவிடை பெறுவதற்கான நேரத்தை ஒருவரே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைப்பது ஒரு வரம். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். கதறி அழ வேண்டுமா, அதில் வேடிக்கை எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
உலகத்தை உலுக்கிய வழக்கு
அண்மையில் அவருடன் தொடர்பில் இருந்த உலகின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் வெளியானதால் இந்த வழக்கு உலகத்தையே உலுக்கியது.
நீதிமன்ற உத்தரவின்படி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த கடிதம் தொடர்பான செய்தியானது மீண்டும் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.