தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்
காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பில் இன்று(1) உயர் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
பயணத்தடை
அதன் பின்னரே தாம் “கோட்ட கோ கம” போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

'கோட்ட கோ கம' ஆயுதப் படைகளால் அழிக்கப்பட்ட பின்னர் ஜூலை 25 மாலை தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பில் இருந்து தனக்கு எதிராக பொலிஸார் பயணத் தடையைப் பெற்றுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எனவே தம்மை கைது செய்வதை தடுக்குமாறு அவர் நிதிமன்றில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri