நீதிமன்றத்தை நாடவுள்ள ஜீவன் தொண்டமான்
கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது. நிர்வாக தவறு இருக்குமென ஆரம்பத்தில் நினைத்தோம்.
காங்கிரஸ் கொடி கட்டி பறக்கும்
காரணம் என்னவென்று வினவியபோது, இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். இவர்கள் வழங்கியுள்ள காரணம், ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில்தான் உள்ளது. ஏனைய தொகுதிகளில் எமது நிலைவரம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - திவா
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Neeya Naana: மனைவியை வேலைக்கு அனுப்ப நள்ளிரவில் கணவன் செய்த செயல்! கோபிநாத்தால் அவிழ்ந்த உண்மை Manithan
