திடீரென சரிவினை பதிவு செய்தது தங்கத்தின் விலை
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 238,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 220,000 ரூபாவாக உள்ளது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை
ஒரு கிராம் தங்கத்தின் விலை இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை நேற்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 239,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 219,000 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சிறிய குறைவை பதிவு செய்துள்ளது.
மேலும் வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri