சம்பள நிர்ணயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ள ஜீவன் தொண்டமான்
சம்பள நிர்ணயம் தொடர்பாக, தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பு, இன்று (28.02.2024) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் இடம்பெற்றுள்ளது.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும், சம்பள நிர்ணய சபையில் கோரிக்கைகள் எவ்வாறு முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் இச்சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
அத்துடன், இக்கலந்துரையாடலில், இ.தொ.கா சார்பில் தேயிலை உற்பத்திக்கான சம்பள சபையின் அங்கத்தவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பி.ஜி சந்திரசேன மற்றும் செங்கோடி சங்கத்தின் சார்பில் வி.ராஜலக்சுமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


