வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்
புதிய இணைப்பு
வடமாகாணத்தின் புதிய ஆளுராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா இன்று மாலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksha) முன்னிலையில் புதிய ஆளுநராக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதலாம் இணைப்பு
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா(Jeevan Thiyagarajah) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இது தொடர்பான அறிவித்தலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
ஜீவன் தியாகராஸா தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
எனினும் அவர் அப்பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 43 நிமிடங்கள் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
