இருதய சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் - பெரும் பாதிப்பில் நோயாளிகள்
ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சில வாரங்களாக இருதய சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பல நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இருதய அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் இருதய-நுரையீரல் இயந்திரத்தை இயக்குவதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற இரண்டு சிரேஷ்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் 60 வயதைத் தாண்டியுள்ளனர்.
ஓய்வு பெற்ற அதிகாரிகள்
அவர்களை மீண்டும் பணிக்கமர்த்த அமைச்சரவை ஒப்புதலுக்காக இயக்குநர்கள் சபை காத்திருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட துறையுடன் தொடர்புடைய மூன்று கனிஷ்ட அதிகாரிகள் தற்போது மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் இருதய சத்திர சிகிச்சை நிபுணர்கள் இந்த கனிஷ்ட அதிகாரிகளின் சேவைகளைப் பெற தயங்குவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நிர்வாக குழுப்பம்
இருதய சத்திர சிகிச்சையின் போது இதயத்தின் செயல்பாடு ஒரு இயந்திரத்தில் தொடர்புப்படுவதாகவும், அதற்காக அனுபவம் வாய்ந்த மூத்த தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை என இருதய நோயியல் வைத்தியர்கள் கூறியுள்ளதால், இந்த விடயத்தில் நிர்வாக குழப்பம் தீர்க்கப்படும் வரை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது தீவு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட பத்தாயிரம் நோயாளிகள் இதய சத்திர சிகிச்சைகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
மேலும் இந்தக் காத்திருப்பு பட்டியல் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும். இவ்வாறான சூழ்நிலையில், ஜெயவர்தனபுர மருத்துவமனையில் எழுந்துள்ள நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசாங்கம் அவசர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.