இறுதி போரின் அனுபவத்தை பெற்றுக் கொள்ளுமாறு அரசை கோரும் நாமல்
இறுதி போரின் பின்னர் நடைபெற்ற மீள் குடியேற்றம் மற்றும் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்தமை தொடர்பிலான அனுபவங்களை பெற்றுக் கொள்ளுமாறு மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
அனர்த்த நிவாரணங்கள் தொடர்பில் நேற்று (10.12.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2009 ஆம் ஆண்டு மீள் குடியேற்றம்
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளிளுடனான இறுதி போரின் பின்னர் பாரிய மக்கள் வடக்கில் முகாம்களில் இருந்தனர். அவர்களை சொந்த இடங்களில் மீள குடியேற்ற மற்றும் இயல்பு நிலையை ஏற்படுத்த பாரிய திட்டம் ஒன்று அன்று இருந்தது.

அத்தோடு சுனாமியின் போது அழிவடைந்த பாரிய சொத்துக்கள் மற்றும் வர்த்தகத்தை மீள கட்டியெழுப்பவும் முடிந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் குறுகிய காலத்தில நடைபெற்றுள்ளன.
76 வருட சாபங்கள்
இவ்வாறான அனுபவங்களை அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதை விடுத்து 76 வருட சாபங்களை பேசி வைராக்கியத்துடன் செயற்படுவதில் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் செய்தவற்றை உற்று நோக்குங்கள்.மில்லியன் 250 ரூபாவை மட்டும் பெற்றுக் கொண்டு சும்மா இருக்காமல் அவர் இந்த நாட்டில் எவ்வாறு செயற்பட்டார் என்று தேடி பாருங்கள்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள்.எந்நேரமும் குறையை பேசி அரசியல் நடத்தாமல் மக்களை விரைவாக மீள் குடியேற்றம் செய்யவும் என்றார்.