முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைவு
முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா முன்னிலையில் கட்சியின் இணைந்து கொண்ட ஜயரத்ன ஹேரத், பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராகவும், குருநாகல் மாவட்டத் தலைவராகவும் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளார்.
ஜயரத்ன ஹேரத் இதற்கு முன்னர் குருநாகல், பொல்கஹவெல மற்றும் மாவத்தகம தேர்தல் தொகுதிகளில் கட்சியையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் அமைப்பாளராகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
கட்சியில் இணைவு
பின்னர், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, அக்கட்சியின் யாபஹுவ தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.

ஜயரத்ன ஹேரத் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்ட சந்தர்ப்பத்தில், இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன, பிரதி செயலாளர் ஜகத் புஷ்பகுமார மற்றும் முன்னாள் வடமேல் மாகாண அமைச்சரும் குருநாகல் தொகுதி அமைப்பாளருமான லட்சுமன் வெண்டருவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.