இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலமானார்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜயானந்த வர்ணவீர தனது 64ம் வயதில் இன்று காலமானார்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஓருவராக வர்ணவீர திகழ்ந்தார்.
1986 முதல் 1994 வரை இலங்கைக்காக 10 டெஸ்ட் போட்டிகளிலும், 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்காண்டதன் பின்னர், அவர் காலி சர்வதேச மைதானத்தின் பராமரிப்பாளராக (Curator) பணியாற்றினார்.
1986ம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற வர்ணவீர 1994ம் ஆண்டு தனது இறுதிப் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற காலத்தில் பந்து வீச்சு பாணி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவினால் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன், சர்வதேச போட்டிகளில் எவ்வித பங்களிப்பும் வழங்கக் கூடாது என மூன்றாண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “ஜயானந்த வர்ணவீராவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இவ்வளவு விரைவாக அவர் மறைந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அமைதியாக உறங்குங்கள் நண்பரே, ஆடுகளம் உங்களை மெதுவாக தழுவட்டும்,” என பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் ரொசான் அபேசிங்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.
வர்ணவீராவின் இறுதிச்சடங்கு தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam