ஜெயலலிதா மரணத்தில் மர்மம்-எஞ்சியோ சிகிச்சை வழங்குவதை தடுத்த சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா உட்பட நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மயக்கமடைந்த பின்னர் நடந்தது என்ன என்பது இரகசியமாக்கப்பட்டுள்ளது
மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் முன்வைத்த கருத்துக்களை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கையளித்தார். இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது . சசிகலாவுடன் மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்றைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
எய்ம்ஸ் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கவில்லை
எய்ம்ஸ் மருத்துவர்கள், மேற்பார்வைக்காக வந்ததாகவும் மருந்துகள் எதுவும் பரிந்துரைக்கவில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தபோது, எந்த நேரத்திலும் மருத்துவமனையில் இருந்து வெளியேறலாம் செய்யப்படலாம் என ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2012ல் ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்த பின்னர் இருவரிடமும் சுமூக உறவு இல்லை உள்ளிட்ட தகவல்களும் அறிக்கையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஞ்சியோ சிகிச்சை வழங்கவிடாமல் தடுத்த சசிகலா
இதனிடையே தமிழக முன்னாள் முதலமை்சசர் ஜெயலலிதாவுக்கு எஞ்சியோ சிகிச்சை வழங்க விடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில், ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசல் பரிந்துரைத்தபடியும் ஜெயலலிதாவுக்கு எஞ்சியோ செய்யப்படவில்லை.
மேலும் 2016 டிசம்பர் 5ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் 4ஆம் திகதியே இறந்தார் என குறிப்பிட்டுள்ளதால், அவரது மரணம் குறித்து அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான எஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.