கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை
இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் வகையில் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் கொழும்பில் (Colombo) முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நடமாடும் சேவையானது, நாளை (27) மற்றும் (28) நாளை மறுதினம் ஹோமாகம பொது விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்னெடுக்கப்பட்ட ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை தொழில்வாய்ப்புக்களை தேடுவோர் மற்றும் பணியில் கடமையாற்றுபவர்களுக்கு பங்களிப்பை வழங்குவதன் மூலம் சமூகத்தில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நிதி உதவிகள்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஹரசர திட்டம், கருசரு திட்டம், ஸ்மார்ட் யூத் கிளப் திட்டம் மற்றும் சிரம வாசனா நிதியம் என்பன ஒன்றிணைந்து கொழும்பு மாவட்ட மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவுள்ளன.

குறிப்பாக, இதன்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள், குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலை புத்தகப்பையுடன் கூடிய உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வலுப்படுத்தும் முகமாக அவர்களின் குடும்பத்தினருக்கு சுயதொழில் செய்வதற்கன நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri