முல்லைத்தீவில் நடைபெற்ற ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை
முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டமான ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவையானது, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தலைமையில் நேற்று (03.05.2024) புதுக்குடியிருப்பில் ஆரம்பமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல பிரதிபலன்களை வழங்கும் வகையில் இந்த வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விசேட வேலைத்திட்டங்கள்
இதன்மூலம், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு பல பிரதிபலன்கள் கிடைப்பதுடன் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது, கிட்டத்தட்ட ஐம்பது வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் வருகை தந்துள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேலிய வேலைகளுக்கான பதிவு செய்யும் வேலைதிட்டமும் நடைபெற்றதுடன் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலை தேடும் அனைவருக்குமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஆட்கடத்தலை தடுப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மக்களுக்கான வாய்ப்புக்கள்
அது மாத்திரமன்றி, முறைசாரா துறை பணியாளர்களுக்கு தொழில் கௌரவத்தையும் வளத்தையும் வழங்கும் கருசரு வேலைத்திட்டம் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் உதவியுடன் பயிற்சி பெற்ற திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடிய ஸ்மார்ட் யூத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிரம வாசனா நிதியத்தின் மூலம் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமும் நேற்று மாலை மேற்கொள்ள்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 22 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
