திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட ஜப்பான் கப்பல்
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்தில் இன்று (28.10.2023) நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், 150.5 மீற்றர் நீளமுடையதென கடற்படை ஊடகப்பரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இக்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஹிசாடோ சோடோகாவா மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவு
இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும்போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31) கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
