பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷிகெரு இஷிபா லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார்.
பதவி விலகல்
கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வி அடைந்தது.
ஆளும் கட்சியான டெமாக்ரடிக் கட்சி பெரும்பாண்மையை இழந்தது. இதனால், நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்விக்கு ஜப்பான் நாட்டுப் பிரதமர் இஷிபா பொறுப்பேற்க நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர்.
கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார்.
ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



