இலங்கை தொடர்பில் ஜப்பான் அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை
ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கை தொடர்பில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கை செய்யத் தயாராக உள்ளது.அதுபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற பிற கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜப்பான் அரசாங்கத்தின் கோரிக்கை

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“சீனா, இந்தியா மற்றும் பிற கடன் வழங்குனர்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்கு இலங்கை தனது சொந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்தகைய முன் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஜப்பான் தனது பங்கைச் செய்யும்.”என தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டம்

இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய சுசுகி, அனைத்து கடன் வழங்குநர்களும் ஒருங்கிணைந்த முறையில் இலங்கைக்கு ஆதரவை வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
மேலும் கடனாளி நாடுகள்,கடனை பெற்றுக்கொள்வதற்கான சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கையை நோக்கி தமது கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam