புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு ஜப்பானிய தூதர் வாழ்த்து
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் H.E. Akio Isomata புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைதியான மற்றும் ஜனநாயக நாடாளுமன்ற தேர்தலுக்காக இலங்கை மக்கள் தீவிரமாக ஈடுபட்டமைக்காக பாராட்டியுள்ளார்.
இன்று (15) அறிக்கையொன்றை வெளியிட்ட தூதுவர் இசோமதா, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு வரலாறு முழுவதிலும் வலுப்பெற்றுள்ளது.
நாடுகளுக்கிடையிலான நட்புறவு
இலங்கையில் நடைபெற்ற இரு தேர்தல்களும் எமது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக அமையும் என ஜப்பான் நம்பிக்கை கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து எமது நாடுகளிலும் உலகிலும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் அடைவதற்கும், பரஸ்பர நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதற்கும், எமது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் எல்லைகளை வலுப்படுத்துவதற்கும் ஜப்பான் எதிர்பார்த்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.