இறுதி தேர்தல் முடிவுகள்! தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி மொத்தமாக 6,863,186 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு
தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு18 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், மொத்தமாக 159 நாடாளுமன்ற ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வசமாகியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் மொத்தமாக 1,968,717 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், 5 தேசியப் பட்டியல் ஆசனங்களுடன் இணைத்து மொத்தமாக 40 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியானது மொத்தம் 257,813 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் உள்ளடங்களாக மொத்தம் 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி 500,835 வாக்குகளை மொத்தமாக பெற்றுள்ளதுடன் 2 தேசியப் பட்டியல் ஆசனங்களுடன் இணைத்து மொத்தம் ஐந்து ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது 350,429 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துடன் மொத்தம் 3 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

மேலும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மொத்தம் 87,038 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், 1 தேசியப் பட்டியல் ஆசனத்துடன் 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, சர்வஜன அதிகாரம் கட்சி 178,008 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 66,234 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன்,1 ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உள்ளடங்களாக, ஏனைய அரசியல் கட்சிகள் சில 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri