நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர
பொதுத் தேர்தலில் மகத்தான தேர்தல் வெற்றிக்காக வாக்களித்த நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
“மறுமலர்ச்சி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கான பொறுப்பை சுமந்த அனைவருக்கும் நன்றி!” என ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி புதிய நாடாளுமன்றத்தை அமைக்கவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், தேசிய பட்டியல் ஊடாக 18 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறுதிப் பெரும்பான்மை
நாடாளுமன்றத்தை சுத்தம் செய்து புதியவர்களை நாடாளுமன்றம் கொண்டு செல்வது தேசிய மக்கள் சக்தியின் கடமை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri
