வெளிநாட்டுக்கு அனுப்புவதாக 100 கோடி ரூபாவை ஏமாற்றிய பெண்
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றி 100 கோடி ரூபாவை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக ஏமாற்றிய கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
250க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 100 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த நிலையில், அநுராதபுரம், புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக மஹர நீதிவான் நீதிமன்றத்தில் 36 பிடியாணைகளும் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் 11 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நீர்கொழும்பு - சிலாபம் வீதியில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகி மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணை கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.