பிரித்தானியா உட்பட மூன்று நாடுகளால் முதல் முறையாக செயற்படுத்தப்படும் புதிய திட்டம்
ஜப்பான், இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மற்றும் வெளிநாட்டு நாடுகளால் மேற்கொள்ளப்படும் முதல் பாதுகாப்பு சாதன தயாரிப்பு திட்டமாக இது கருதப்படுகிறது.
டெம்பெஸ்ட் என்ற திட்டத்தின் மூலம் 2035 ஆம் ஆண்டுக்குள் புதிய போர் விமானத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விமானத்தை வடிவமைக்கும் மூன்று நிறுவனங்கள்
பிரிட்டனின் "BAE Systems PLC", ஜப்பானின் "Mitsubishi Heavy Industries" மற்றும் இத்தாலியின் "Leonardo"ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த விமானத்தை வடிவமைத்துள்ளன.

இந்த விமானம் மிகவும் உயர்தர டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் போர் திறன்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், இத்தாலி மற்றும் பிரிட்டன் ராணுவ பலத்தை மேம்படுத்த ரஷ்யா மற்றும் சீனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam