இலங்கையின் மீட்சிக்கு கைகொடுக்கும் ஜப்பான்: செய்திகளின் தொகுப்பு
ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்குப் பயன்தரும் வகையில் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜப்பானின் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி (FUJIMARU Satoshi) மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் கண்காணிப்பு மறுசீரமைப்புக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யமமோட்டோ கோசோ(YAMAMOTO Koza) ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (31.07.2023) அதிபர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை நிறைவடைந்த பின்னர் குறித்த திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் ஆரம்பிக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததுடன், இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகளை இணைத்து இது தொடர்பான திட்டங்கள் குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,