இலங்கைக்கு பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் ஜப்பான்!
தம்மிடம் இருந்து 11 மில்லியன் எஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளைப் பெறும் நாடுகளில், ஜப்பான் இலங்கையையும் உள்ளடக்கியுள்ளது.
இதன்படி ஜப்பான், இலங்கைக்கு 1.45 மில்லியன் எஸ்டராசெனெகா தடுப்பூசிகளை கோவேக்ஸ் வசதிகள் ஊடாக இலங்கைக்கு வழங்கும் என்று இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.
ஜப்பானால் தயாரிக்கப்பட்ட எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரகால பயன்பாட்டிற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, ஜப்பான் கோவாக்ஸ் மூலம் 11 மில்லியன் தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு வழங்கவுள்ளது.
தேவையான ஏற்பாடுகள் முடிந்ததும், இந்த தடுப்பூசிகள் கம்போடியா, லாவோஸ், கிழக்கு திமோர், பங்களாதேஷ், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, பிஜி, கிரிபாஸ், பப்புவா நியூ கினியா, சமோவா, சாலமன், டோங்கா, வனடு மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜப்பானில் இருந்து தடுப்பூசிகளை நன்கொடையாகக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
