மீண்டும் இதேபோன்று நடந்தால் எந்த உதவியும் கிடைக்காது! ரணிலை எச்சரித்த ஜப்பான்

Galle Face Protest M. A. Sumanthiran Ranil Wickremesinghe Japan Sri Lanka Relationship Japan
By Jenitha Jul 25, 2022 04:37 AM GMT
Report

இன்னும் ஒரு தடவை இவ்வாறான ஒரு வன்முறை சம்பவம் நடைபெறுமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

வெளிநாட்டு தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்களை கடந்த (22) மாலை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் சம்பந்தமாக இதன்போது ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மீண்டும் இதேபோன்று நடந்தால் எந்த உதவியும் கிடைக்காது! ரணிலை எச்சரித்த ஜப்பான் | Japan Sri Lanka Relationship Ranil Wickremesinghe

இச் சந்திப்பின் போதே ஜப்பானிய தூதுவர் இது போன்ற வன்முறை சம்பவங்களை இன்னும் ஒரு தடவை ஏவிவிடுவீர்களாக இருந்தால் ஜப்பான் அரசாங்கத்தின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என எச்சரித்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ராஜபக்சக்களின் பிரதான முகவராக ரணில் விக்ரமசிங்க   

ராஜபக்சக்களின் பிரதான முகவராக ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் எனவும் அவர் மூலமே ராஜபக்சர்கள் தங்கள் நகர்வுகளை மேற்கொள்கின்றார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ரணிலை பயன்படுத்தி ராஜபக்சர்கள் மேற்கொள்ளும் நகர்வுகள்!

இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்ற முடிவில் கூட்டமைப்பு உறுதியுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது..

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது. நாடாளுமன்ற இரகசிய வாக்கெடுப்பு முறையில் இடம்பெற்ற தேர்தலில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்க புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

இருப்பினும் ஜனாதிபதி தேர்தலின் இறுதி கணம் வரை ரணிலை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு அதிக கட்சிகளின் ஆதரவு வெளிப்படுத்தப்பட்ட போதும் 81 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்திருந்தார்.

மீண்டும் இதேபோன்று நடந்தால் எந்த உதவியும் கிடைக்காது! ரணிலை எச்சரித்த ஜப்பான் | Japan Sri Lanka Relationship Ranil Wickremesinghe

இந்நிலையில் இரகசிய வாக்கெடுப்பு முறை என்பதால் வெளிப்படையாக டலஸ்க்கு ஆதரவு அளித்துவிட்டு திரை மறைவில் ரணிலுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என பல்வேறு தரப்பினராலும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது என்றும் அதிபர் தேர்வு வெளிப்படையாக நடத்தப்பட வேண்டியது ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US