நாட்டை வந்தடைந்த சொகுசு கப்பல்!
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மொத்தம் 202 அங்கத்தவர்களை கொண்ட இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் SHOTA TAKASHIRO பணியாற்றுகிறார்.
வழங்கல் மற்றும் சேவை தேவை
மேலும், இந்த போர் கப்பலானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துக் குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை Destroyer வகைக்குச் சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பலானது 151 மீற்றர் நீளம் கொண்டது.
இக்கப்பலானது வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்திசெய்த பின்னர் மார்ச் 03 ஆம் திகதி இலங்கையை விட்டு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
