ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான அறிவிப்பு
ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27.04.2026) அதிகாலை பதிவாகியுள்ளது.
இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஒரு வாரத்திற்கு முன்பு
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவில் உள்ள சரபெட்சு எனும் சிறிய நகரத்திற்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில், 81 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு, ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam