செந்தில் தொண்டமானுடன் ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பேச்சுவார்த்தை

Japan Sri Lanka Relationship Japan Senthil Thondaman
By DiasA Jun 22, 2023 08:58 PM GMT
Report

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷுன்சுகே டேக்கி கிழக்கு மாகாண ஆளுநருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் (22.06.2023) வெளியுறவு அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வெளியுறவுத்துறைக்கான துணை அமைச்சர் ஷுன்சுகே டேக்கியை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

செந்தில் தொண்டமானுடன் ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பேச்சுவார்த்தை | Japan Foreign Affairs Minister Senthil Dondaman

நீண்டகால நட்புறவு

இந்தக் கலந்துரையாடலில் போது, இலங்கை – ஜப்பான் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை இருவரும் நினைவூட்டியதுடன் எதிர்காலத்தில் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மாகாண ஆளுநர் என்ற வகையில் மாகாணத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஜப்பான் அரசு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், தங்களுடைய முயற்சியை ஜப்பான் அரசு பாரட்டுவதாகவும் ஷுன்சுகே டேக்கி செந்தில் தொண்டமானிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் சிறப்பாக உள்ளதாகவும் ஐ.எம்.எப். நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கும், கடன் மறுசீரமைப்புத் திட்டங்களின் போதும் இலங்கை ஜனாதிபதியின் வழிகாட்டலின் பேரில் அர்ப்பணிப்புடன் இலங்கை நாட்டின் அதிகாரிகள் பணியாற்றியதாகவும் ஷுன்சுகே டேக்கி ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தார்.

செந்தில் தொண்டமானுடன் ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பேச்சுவார்த்தை | Japan Foreign Affairs Minister Senthil Dondaman

ஜப்பான் அரசின் பங்களிப்பு

அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள இலங்கை வந்த வெளியுறவுத்துறைக்கான துணை அமைச்சர் ஷுன்சுகே டேக்கிக்கு சிறந்த வரவேற்பை இலங்கை அளித்திருந்தமைக்காக அவர் பாராட்டையும் நன்றியினையும் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் இரு நாடும் இணைந்து மீன்பிடித்துறையுடன் தொடர்புடைய துறைசார் தொழிலை மேம்படுத்துவது குறித்தும், கனிம வளங்கள் குறித்து ஆராய்ந்து அதனை செயற்படுத்த ஜப்பான் அரசு பங்களிப்பு அளிக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்கோரிக்கையை ஏற்று, அதற்கு சாதகமாக பதிலளித்த ஷுன்சுகே டேக்கி ஜப்பான் தனது முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க, ஜப்பான் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஜப்பான் தனது பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் ஆளுநரிடம் ஷுன்சுகே டேக்கி உறுதியளித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US