ஜப்பானில் இன்று பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 10.00 மணிக்கு (02.04.2025) ஜப்பான் நேரப்படி, காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கியூஷு தீவிலிருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பிற சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லலை. ஜப்பானிய அரசாங்கம் நேற்று (1) ஒரு அறிக்கையை வெளியிட்டது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அதில் எதிர்காலத்தில் நாட்டில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 8 முதல் 9 வரை பதிவாகியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய அரசாங்கம் மேலும் அந்த அறிக்கையில் நிலநடுக்கம் ஏற்பட 80 வீத வாய்ப்பு இருப்பதாகவும், கிட்டத்தட்ட 300,000 உயிர்கள் இழக்கப்படலாம் என்றும் கூறியிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை (28) மியன்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அந்நாட்டில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகி 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஜப்பானில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
