ஜே.வி.பியின் இந்திய பயணம் ஏற்படுத்தியுள்ள அரசியல் பதற்றம்...
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் உட்பட குழுவினரின் இந்திய பயணம் அரசியல் அரங்கில் பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்திய குடியரசு தின நிகழ்வுக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஒடிசா மாநிலத்திற்கு சென்று வந்தனர். அதை தொடர்ந்து ஜே.வி.பியின் ஒழு இந்திய விஜயம் பல அரசியல் எதிர்ப்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்கள்
இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (05.01.2026) காலை புதுடில்லி நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த விஜயத்தில் குஜராத் மற்றும் கேரள மாநிலங்களுக்கான விஜயங்களும் அடங்கும், மேலும் அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

இந்தியாவின் விவசாயத் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான மையங்களைப் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விஜயத்திற்காக ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜனக அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், கிட்னன் செல்வராஜ், ஜே.வி.பி ஊடகப் பிரிவு உறுப்பினர் ஹேமதிலக கமகே மற்றும் ஜே.வி.பி சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுபாஷினி ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri