இணையத்தில் வெளியான விஜயின் ஜனநாயகன் திரைப்படம்! ஒட்டுமொத்த சினிமாவையும் அச்சுறுத்தலில்
விஜய் போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தின், பெரிய பட்ஜெட் கொண்ட படத்திற்கு இப்படி நடப்பது என்பது ஒட்டுமொத்த சினிமாவே பயப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
ஈழத்து இயக்குநர் சோமிதரனின் நீளிரா படம் தொடர்பாக வவுனியா வசந்தி திரையரங்கில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையத்தில் வெளிவந்தமை தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
ஒட்டுமொத்த சினிமாவே பயப்பட வேண்டும்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகன் படமானது இணையத்தளத்தில் மோசடியான முறையில் வெளிவந்தது என்பது மிகவும் தவறானதும், கேவலமானதுமான செயலாகும். அத்தோடு இது ஒரு குற்றச் செயலாகும்.
அது எந்தப் படமாக இருந்தாலும் சரி, வெளியீட்டிற்கு முன்போ அல்லது வெளியீட்டிற்குப் பிறகோ திருட்டுத்தனமாக வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒட்டு மொத்தத் திரையுலகமும் இதைத்தான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, விஜய் போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தின், பெரிய பட்ஜெட் கொண்ட படத்திற்கு இப்படி நடப்பது என்பது ஒட்டுமொத்த சினிமாவே பயப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இதை திரையுலகமும் ரசிகர்களும் இணைந்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். இது படக்குழு வெளியிட வாய்ப்பு இருக்கின்றதா என்று கேட்டால் அது எனக்கு தெரியவில்லை.
மேலும் திருடன் எங்கேயும் இருக்கலாம். அதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது என தெரிவித்தார்.
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam