இலங்கையை காட்டி இந்தியாவை எச்சரிக்கும் ஜம்முவின் முன்னாள் முதல்வர்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இந்திய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை அரசாங்கம் எவ்வாறு தனது பொருளாதாரத்தை நிர்வகிக்கக் கூடாது என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்பது இரகசியமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் பணவீக்க முறைகளுக்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்ததால், இலங்கை போன்ற நிலையே எதிர்நோக்கப்படும் என்று  அவர் எச்சரித்துள்ளார்.
2014 முதல், இந்தியா ஒரு வகுப்புவாத வெறி மற்றும் கற்பனையான அச்சத்திற்குள் தள்ளப்படுகிறது.
இது மிகை தேசியவாதம் மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்தின் அதே பாதையில் செல்கிறது.
அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா தெரிவித்துள்ளார்.

 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        