ஜகார்த்தாவில் அதிரடிச் சோதனை: இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது!

Indonesia World
By Amal May 09, 2026 11:18 PM GMT
Report

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் சட்டவிரோத இணையவழி சூதாட்ட விடுதி மீது நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், வியட்நாம் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 321 வெளிநாட்டவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இணையவழி சூதாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் குற்றக் கும்பல்களை ஒடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜகார்த்தாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் கடந்த இரண்டு மாதங்களாக இந்தச் சூதாட்ட மையம் இயங்கி வந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் 228 பேர் வியட்நாமையும், 57 பேர் சீனாவையும் சேர்ந்தவர்கள்.

இறுதி நிமிடத்தில் முடிவை மாற்றிய ஆளுநர் - விஜயிடம் வசமாக சிக்கிய திமுக ஸ்டாலின்!

இறுதி நிமிடத்தில் முடிவை மாற்றிய ஆளுநர் - விஜயிடம் வசமாக சிக்கிய திமுக ஸ்டாலின்!

 இணையவழி சூதாட்ட மையங்கள்

மேலும் மியான்மர் (13), லாவோஸ் (11), தாய்லாந்து (5) மற்றும் கம்போடியாவை (3) சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர். கைதுசெய்யப்பட்ட 321 பேரில், 275 பேர் மீது இந்தோனேசியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் சூதாட்டக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குற்றத்திற்கு அதிகபட்சமாக ஒன்பது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஜகார்த்தாவில் அதிரடிச் சோதனை: இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது! | Jakarta Raid Foreigners Arrested Online Gambling

இந்தச் சூதாட்டக் கும்பல்கள் பெரும்பாலும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களையே இலக்காகக் கொண்டு செயல்பட்டுள்ளதாகப் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

கம்போடியாவிலிருந்து இணையவழி சூதாட்ட மையங்கள் தற்போது இந்தோனேசியாவிற்கு இடம்பெயர்ந்து வருவதாக இன்டர்போல் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது இந்தோனேசியாவில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெறும் இரண்டாவது பெரிய அதிரடி நடவடிக்கையாகும்.

முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, சிங்கப்பூருக்கு அருகிலுள்ள பாடம் தீவில் இணையவழி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக 210 வெளிநாட்டவர்களை அந்நாட்டின் குடிவரவுத் துறை அதிகாரிகள் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

18 மணிநேர நீர்வெட்டு..! கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

18 மணிநேர நீர்வெட்டு..! கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஜோசப் விஜயாகிய நான்..! பதவியேற்பு விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் - நேரு உள் விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு

ஜோசப் விஜயாகிய நான்..! பதவியேற்பு விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் - நேரு உள் விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US