8 ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தானுக்கு செல்லும் இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதி
இந்தியா - பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாக எல்லை ரீதியான மோதல் வலுவடைந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2016 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் விஜயத்திற்கு பின்னர் இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் அவர் பாகிஸ்தானுக்கு 2 நாட்கள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
ஜெய்சங்கர் கருத்து
இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கருத்து தெரிவிக்கையில்,
“பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இம்மாதம் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவே பாகிஸ்தானுக்கு செல்கிறேன்.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அநுர ஆட்சியுடன் இணைவது குறித்து தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தலாம்: தேசிய மக்கள் சக்தி தரப்பில் தகவல்
இரு நாட்டு உறவு
நான் பாகிஸ்தான் செல்வது இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுவதற்கு அல்ல.
அது பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் பதற்றமான தன்மை காரணமாக, ஊடகங்களுக்கு எனது பயணம் குறித்து நிறைய ஆர்வம் இருக்கலாம்.
நான் இந்த அமைப்பில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக மாத்திரம் இருப்பேன்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |