மட்டக்களப்பு சிறைச்சாலையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் மீண்டும் கோவிட் தொற்று பரவிவரும் நிலையில் சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்குப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய சுகாதார பணிமனை ஊடாக பல்வேறு கோவிட் தடுப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் முதற்கட்டமாக அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
இந்நிலையில், வியாழக்கிழமை (11) திகதி முதல் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் 136 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் 555 சிறைக்கைதிகளுக்கும் குறித்த பூஸ்டர் தடுப்பசி ஏற்றும் நடவடிக்கை வியாழக்கிழமை(11) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி இளையதம்பி உதயகுமார் தலைமையிலான சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam