இத்தாலிக்கான இலங்கையின் தூதுவராக ஜகத் வெல்லவத்த நியமனம்
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவிக்கு பெயரிடப்பட்டிருந்த கலாநிதி ஜகத் வெல்லவத்த (Jagath Wellawatta), இத்தாலிக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நேற்று (22) அறிவித்துள்ளார்.
ஜகத் வெல்லவத்த அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்கவிருந்த நிலையில், அந்நாட்டில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் போது, மிகவும் சிரமப்பட்டு ஆங்கில மொழியில் உரையாற்றிய காணொளி கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
ஆங்கில மொழியை பயன்படுத்தும் ஒரு நாட்டுக்கு ஆங்கில மொழியில் புலமையற்ற நபர் தூதுவராக நியமிக்கப்பவது குறித்து சிலர் விசனம் தெரிவித்தனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே ஜகத் வெல்லவத்த, தற்போது இத்தாலிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan