வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி யாழ்.இளைஞனிடம் பல இலட்சம் மோசடி
யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி யாழ்.வலிகாமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் வசிக்கும் நபர் ஒருவர் மூலம் வெளிநாட்டுக்கு எடுப்பதாக கூறி யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளார்.
இளைஞனுடைய சகல விபரங்களையும் பெற்றுக்கொண்ட தரகர் போலி விசாவினை இத்தாலியில் வசிக்கும் நபர் மூலம் பெற்றுக்கொண்டு இளைஞனுக்கு வழங்கியுள்ளனர்.

போலி என உறுதிப்படுத்திய தூதரகம்
வீசாவினை தூதரகத்திடம் காண்பித்த போது போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞன்,
இத்தாலியில் வாசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பிரதான சூத்திரதாரி.
இவர் முல்லைத்தீவு தீவு பெண் ஒருவரை முதலில் திருமணம் செய்து இரு பிள்ளைகள் இருப்பதாகவும் பின்னர் அவர்களை கைவிட்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை மறுமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் என்னைப் போன்ற பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri