மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் பலி!
மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுசகின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம்
இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் வான் சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை வீதியில் கொழும்பை நோக்கி சம்பவதினமான இன்று அதிகாலை 6.30 மணிக்கு பயணித்த வான் தனியார் வங்கி ஒன்றின் முன்னால் வீதியை கடக்க முற்பட்ட குறித்த நபருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு பேருந்தில் வந்து இறங்கிய நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வான் சாரதியை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு 11 மணி நேரம் முன்

Rasipalan: தலைவிதியேவே மாற்றப்போகும் சுக்ராதித்ய ராஜயோகம்- யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் பாருங்க Manithan
