தேசியமட்ட போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற யாழ்.மாணவர்கள்(Photos)
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்.மாவட்ட பாடசாலைகள் பெற்று சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட தடகள போட்டிகள் நேற்று கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளது.
மூன்று பதக்கங்கள்
இந்நிலையில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சொபிசன் 4.10 மீட்டர் பாய்ந்து தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை தெல்லிப்பளை மகாஜன கல்லூரியைப் பிரதிநிதித்துவபடுத்தும் கஸ்மிதன் 3.90 மீட்டர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த இ.அபிநயன் 3.80 மீட்டர் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
குண்டு போடுதல்
அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகள போட்டியில் குண்டு போடுதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் எஸ்.மிதுன்ராஜ் வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் 14.49 மீட்டர் தூரம் எறிந்து எஸ்.மிதுன்ராஜ் வெண்கல பதக்கத்தைக் வென்றுள்ளார்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் இன்று (03.22.2022) சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 20 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் கலந்துகொண்ட யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் மாணவி ச.தீபிகா 3 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி-கஜிந்தன்


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
