யாழில் வாகன விபத்து: சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி (Video)
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி - நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (02.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
விற்பனை நிறுவன வாகனமும் மோட்டார் வண்டியும் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam