யாழில் வாகன விபத்து: இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவமானது இன்று (21.01.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
பட்டாரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டவேளை எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இருவர் பலத்த காயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
