யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய புது வருடப் பிறப்பு விசேட பூசைகள்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.(Jaffna) வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் புது வருடம் பிறப்பினை முன்னிட்டு விசேட பூசைகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த பூஜை வழிப்பாடுகள் நேற்று(13) புது வருடம் பிறக்கும் நேரமான 8:15 மணியளவில் ஆலய பிரதம குரு கணபதீஸ் வரக்குருக்கள் தலமையில் நடைப்பெற்றுள்ளது.
குரோதி வருட வழிபாடுகள்
இதேவேளை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் குரோதி வருட வழிபாடுகள் இன்று(14) அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதமும், 5:00 மணிக்கு உசற்கால பூஜையும், 05.15 மணிக்கு அபிஷேகமும் ஆரம்பமாகவுள்ளதுடன் முதலாம் கால பூஜை 06.00 மணிக்கும், வசந்தமண்டப் பூஜை 06.15 மணிக்கும் மேஷசங்கிராந்தி தீர்த்தம் 07.00 மணிக்கும் கை விசேஷம் 07.30 மணிக்கும், இடம் பெறவுள்ளதுடன் பொங்கல் நிகழ்வு 08.00 மணிக்கும் இடம்பெறவுள்ளது.