யாழ்ப்பாணம் உரும்பிராயில் கோர விபத்து! தந்தையும் மகனும் பரிதாப மரணம்
யாழ்ப்பாணம் - உரும்பிராய் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் தந்தையொருவரும் அவருடைய மகனும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
நேற்றிரவு(21/04/2026) 11.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று விட்டு தந்தையும், மகனும் தமது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது இந்த விபத்திற்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள்
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் உரும்பிராய் சந்தியிலுள்ள மின் கம்பத்துடன் மோதுண்டதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, ஏழாலை கிழக்கைச் சேர்ந்த 64 வயதுடைய பரமேஸ்வரன் மற்றும் 23 வயதுடைய அவருடைய மகன் கஜதீபன் ஆகிய இருவருமே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam