இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது
இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள், நேற்று பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
வணிக விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து, விசாக்கள் காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் 47 சீன நாட்டவர்களும், இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு இந்தியரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டவர்கள் கைது
நீர்கொழும்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த போது குறித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam