யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் நடத்தவுள்ள பேரணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் பெப்ரவரி 4 ஆம் திகதி நடத்தவுள்ள பேரணிக்கு எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை நேற்று(01.02.2024) தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழர் தேசம்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெப்ரவரி 4 ஆம் நாள், 76 வருடங்களுக்கு முன்னர் தமிழர் தேசத்தின் இறைமையை பிரித்தானியரிடமிருந்து கையகப்படுத்திய சிங்கள - பெளத்த பேரினவாதம், தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரத்தை சூறையாடிய கருப்பு நாளாகும்.

முழுத் தீவினதும் ஆட்சியதிகாரத்தினைத் தனது கையில் வைத்துக் கொண்டு, தமிழர் நிலங்களை ஆக்கிரமித்தும், தமிழ் இனவழிப்பை மேற்கொண்டும், தமிழர் தேசம் மீதான திட்டமிட்ட சிங்கள- பெளத்த ஆக்கிரமிப்புக்கள், அதன் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பையும் சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ந்து வருகிறது.
முடிவின்றித் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பிலிருந்து தமிழர் தேசம் பாதுகாக்கப்படல் வேண்டுமாயின், தமிழ்த் தேசத்தின் இறைமையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு அமைய வேண்டும்.இனவழிப்புக்கான பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்.
13ஆம் திருத்தம்
அந்தவகையில் - ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தத்தினை முற்றாக நிராகரித்தமை, திம்புப் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தியமை, பொறுப்புக்கூறலை வலியுறுத்தியமை உள்ளிட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக அறிக்கையின் உள்ளடக்கமானது, இதுவரைகாலமும் சர்வதேச அரங்கில் பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கையை பாதுகாத்தவர்களையும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு கடிதங்களை எழுதி, தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை நீக்கம் செய்யும் வகையில் பெய்யான கருத்தியலை விதைத்த தரப்புக்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

அந்தவகையில் - பெப்ரவரி 4 ம் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan